மழைகொட்டுமோர்
நள்ளிரவில் இடிவிழுந்து
விரிசல் கண்டது சுவர்..
மறுதினம் ஆளுகொருபுறம் நின்று
நூல்கோர்த்து பார்த்தோம்...
பிரிதொர்தினம் விரிசலிடை
விரல் கோர்த்துக்கொண்டோம்...
மற்றுமோர் சமயத்தில்
கைகுலுக்கிக்கொள்ள முடிந்தது...
சிலநாட்களாய்
உள்வரவும் வெளியேறவும்
ஏதுவையிருகிறது...
ஆனாலுமென்ன
பேரிடியின் முந்தயகணத்தின்
மின்னொளியில் பார்த்த
முழுச்சுவரை என்னசெய்தும்
ஞாபகத்திலிருந்து அகற்ற முடிவதேயில்லை...
இளையராஜா 75
5 years ago
4 comments:
அட்டகாசமான கவிதை. ஆழமாக இருந்தது!
>>நூல்கோர்த்துப்பார்தோம்’ என்று தொடங்கியது சுவையாக இருந்தது.
நிறைய எழுதுங்கள். வாழ்த்துகள் :)
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி அரவிந்த்... :)
நிச்சயமா முயற்சி செய்யறேன் :) :)
அகற்றுவதும் இயல்பு
அகல்வது இயல்பு... அகற்றுவதல்ல...
Post a Comment