பிளாட்பார குளிரில் படுத்து
நடுங்கி கொண்டிருந்தவளை
பிளாட்பாரத்தில் படுத்து கொள்பவன் 
கடக்கையில் 
பரஸ்பர புன்னகைகள் 
பரிமாறிக்கொள்ளப்பட்டது...
"எங்க போற?" 
என்ற இவளின் தமிழ் கேள்விக்கு
அவன் ஹிந்தியில் பேசியது 
பதிலாயும் இருந்திருக்கலாம்...
மொழிகளை கடந்த பரிமாற்றம்
அங்கு துவங்கிய வேளையில் 
பசிக்கிறது என்றவளின் 
குரலில் இருந்த பசியை அறிந்தவன்
தன் அழுக்கு மூட்டை திறந்து 
யாரோ தந்த 
ஒற்றை பார்சலை அவளிடம் வைத்தான்...
பிரிக்கும் போதே வெளிவந்தது 
கெட்டுப் போன வாடை...
எந்தவித சலனமுமின்றி 
அவன் எழுந்து நடந்தான் 
அவள் படுத்துக்கொண்டாள்...
பாதி பிரிக்கப்பட்டு 
காற்றில் பட படத்தது பார்சல்...
அந்த ஐந்து நிமிடங்கள்
2 months ago
 
2 comments:
அதுக்கப்புறம் வீட்டுக்கு போயி நீங்க சமைச்சு சாப்பிட்டீங்களா ?
என்னோட சப்பாத்தி பார்சல கொடுத்துட்டு கிளம்பிட்டேன்...
Post a Comment